உத்தரகாண்ட் மாநிலம் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் நேற்று ராஜ்பவனில் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை நேற்றிரவு நேரில் சந்தித்து பேசினார். முதலமைச்சரின் திடீர் ராஜினாமா கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உத்திரகாண்ட் மாநில பாஜக தலைவர்கள் பலர் இவர் மீது அதிருப்தியில் இருந்ததால், கட்சி உயர்மட்ட குழு அவரை டெல்லிக்கு அழைத்து இருந்தது. பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நாட்டாமை சந்தித்த பின்னர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக புஷ்கர் சிங் தாமியை எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத் பதவி விலகியதை தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற 6 மாதத்தில் எம்எல்ஏவாக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டாலும், பாஜக உட்கட்சி பூசலால் கடந்த 4 மாதங்களில் உத்திரகாண்ட் மாநிலத்துக்கு மூன்றாவது முறையாக முதல்வர் தேர்வாகியுள்ளார்.