உத்திரப்பிரதேச மாநிலத்தில் மே 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் மே 10ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.