Categories
தேசிய செய்திகள்

“உத்தரபிரதேசத்தை விட்டு நான் வெளியேறமாட்டேன்”…. பிரியங்கா காந்தி…..!!!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச்.10) எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சமாஜ் வாதி கட்சியானது 96 இடங்களை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் உ.பி., மாநிலம் என் முன்னோர்களின் மண். அவர்களின் ரத்தம் இந்த மண்ணை வளர்த்தது. தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் சரி நான் இந்த மாநிலத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகால உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |