உத்தரபிரதேசம் சட்ட மேல்சபை கடந்த 1887 ஆம் வருடம் உருவாக்கப்பட்டது. முதன் முதலில் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. இதையடுத்து 1909 ஆம் வருடம் 46 உறுப்பினர்களை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, காங்கிரசின் முதலாவது உறுப்பினராக (எம்.எல்.சி.) பதவியேற்றார். அதிலிருந்து தொடர்ந்து மேல் சபையில் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் இருந்து வருகிறது. இப்போது காங்கிரஸ் சார்பாக ஒரே எம்எல்சி-யாக இருந்த தீபக்சிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. அதன்பின் சென்ற 110 வருடங்களில் உத்தரபிரதேசம் சட்ட மேல் சபையில் முதன் முறையாக காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதநிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்தநிலைமை துயரமானது என சட்டசபை காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஸ்ரா மோனா கூறியுள்ளார். இந்த வருடம் நடைபெற்ற உத்தரபிரதேசம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்தது. இதன் காரணமாக புதியதாக யாரையும் மேல் சபைக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை இருக்கிறது. எனினும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆசிரியர்கள் ஒதுக்கீட்டில் மேல் சபைக்கு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் பிரதிநிதிகளை அனுப்ப முயற்சி செய்வோம் என்று ஆராதனா மிஸ்ரா மோனா தெரிவித்தார். அதேநேரத்தில் 100 உறுப்பினர்களை கொண்ட மேல் சபையில், 72 உறுப்பினர்களுடன் ஆளும் பா.ஜனதா வலிமையான இடத்தில் இருக்கிறது.