Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உத்தரவிட்ட கலெக்டர்….. ரூ 50 கோடி மதிப்புள்ள…. தாலுகா அலுவலகம் கட்ட இருந்த நிலம் மீட்பு..!!

வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த  1 3/4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. தற்சமயம் வண்டலூர் தாலுகா அலுவலகம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் ஊராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் வண்டலூர் ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள இடத்தை தேர்வு செய்து வண்டலூர் தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்தது.

இதையடுத்து அந்த இடத்தை சிலர் பல வருடங்களாக ஆக்கிரமித்து கடைகள், கட்டிடங்கள் கட்டியிருந்தார்கள். இதனால் வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்ட நிலையில், அந்த கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய்த்துறையினர் 3 பொக்லைன்  எந்திரங்களுடன் அந்த இடத்திற்கு சென்றார்கள்.

அதன் பின் அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றினார்கள். இதுகுறித்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நிருபர்களிடம் பேசியதாவது, இந்த வண்டலூர் தாலுகாவில் புதிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு 1  3/4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. தற்போது இந்த இடத்தின் சந்தை மதிப்பு 50 கோடி இருக்கும். இதைத்தொடர்ந்து இந்த இடத்தில் வண்டலூர் தாலுகா அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் விரைவில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |