Categories
மாநில செய்திகள்

“உத்தரவு பொருந்தாது”….. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்….!!!!

ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என இடைக்கால உத்தரவு ஜூன் 23ஆம் தேதி பொது குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பிறகு நடக்கும் பொதுக்குழுவுக்கு பொருந்தாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓபிஎஸ் தரப்புக்கு கொடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. நாளுக்கு நாள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றன. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டுவதற்கு அனுமதி வழங்கியும் அந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்ற இடைக்கால உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை மீறியதாக கூறி சண்முகம் அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில் 23 தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களும் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை தலைமை வேண்டும் என்றும் கையெழுத்திடப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் இடைக்கால உத்தரவு பொருந்தும் என்றும் அதன் பிறகு நடக்கும் பொதுக்குழுவுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று உத்தரவிட்டுள்ளதால் ஓபிஎஸ் தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிப்பதற்கு தனி நீதிபதியை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |