9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக் 31) முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு:
9,10,11 ,மற்றும் 12 ஆம் வகுப்புகள் வரும் 16 ஆம்தேதி முதல் செயல்பட அனுமதி
பள்ளி, கல்லுரி பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
அனைத்து கல்லூரி, கல்லூரி ஆராய்ச்சி நிறுவனங்களும் செயல்பட அனுமதி
தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி
50 சதவித இருக்கைகளுடன் இயங்க நிபந்தனை
நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி