Categories
தேசிய செய்திகள்

உத்தராகண்ட் இடைத்தேர்தல்….. “முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி”….. வெளியான அறிவிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநில சாம்பவாத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் தாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பொறுப்பேற்றார்.  ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக ஏப்ரல் 21ம் தேதி சம்பவாத் தொகுதி பாஜ எம்.எல்.ஏ கைலாஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சம்பவாத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல்போட்டியிட்டு 55,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை புஷ்கர் சிங் தாமி தக்க வைத்தார்.

Categories

Tech |