உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரபல மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் அகில பாரத அகதா பரிஷாத் அமைப்பின் தலைவராக இருந்தவர் மகந்த் நரேந்திரா கிரி. இவர் பிரக்யாராஜ் நகரில் மடம் ஒன்றை நடத்தி வருகிறார், அதில் தலைமை மடாதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில் அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் ஐந்து பக்கத்தில் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் மடாதிபதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.