உத்திரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி கார்வால் என்ற இடத்தில் இன்று மாலை 6 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் குறித்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.