Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் காலியாகும்… 11 பதவிகள்… நவம்பர் மாதம் தொடங்கும் தேர்தல்… இன்று வெளியான அறிவிப்பு…!!!

உத்திரப் பிரதேசத்தில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதில் உத்திரபிரதேசத்தில் 10 இடங்கள் மற்றும் உத்தரகாண்டில் ஒரு இடம் காலியாகும். அந்த பதவிக்கான இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 11 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். அதன்படி வருகிற 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அதே நாளில் வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்படும்.மேலும் ஓட்டுப்பதிவு காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள் முடிவடையும். அதன் பிறகு மாலை 5 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |