Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில்… பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு… பெற்றோர்கள் அச்சம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை இன்னும் குறையாத பட்சத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.கொரோனா தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு வழிகாட்டுதலின்படி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற அக்டோபர் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

Categories

Tech |