Categories
தேசிய செய்திகள்

“உத்திரபிரதேசத்தில் வரும் ஆண்டு முதல் இந்தி மொழியில் மருத்துவ படிப்புகள்”? முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பேச்சு…!!!!!

மத்திய அரசின் உள்துறை மந்திரி ஆகவும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராகவும் இருக்கின்ற அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்திருக்கின்ற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மற்றும் பிராந்திய மொழிகள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் முதன் முறையாக இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அப்போது இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் வருடம் புத்தகங்களை அமித்ஷா வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இந்தியில் மருத்துவ படிப்பு என்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளரும் நிபுணருமான டாக்டர் நரேஷ் ரோகித் கருத்து தெரிவித்திருக்கிறார். எம்பிபிஎஸ் என்பது அடிப்படை பட்டப் படிப்பு அல்ல உயிர் ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவர்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

மேலும் உலக சுகாதார அமைப்பு யுனிசெப் போன்றவற்றின் மருத்துவ பத்திரிகைகள் வழிமுறைகள் ஒழுங்கு முறைகளை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும் அவை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. இந்தியில் மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவிற்கு வெளியே போய் மேல்படிப்பு படிக்கவும் ஆராய்ச்சி நடத்தவும் முடியாது வெறும் எம்பிபிஎஸ் உடன் படிப்பை நிறுத்த மாட்டார்கள். அதை முடித்த உடனேயும் அதன் பின்னரும் அவர்கள் உயர் படிப்பை தொடர்கின்றார்கள் அவர்களுக்கு முதுநிலை படிப்புகள் மாநில மொழிகளில் வர வேண்டிய தேவை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, உத்திரபிரதேசத்தில் சில மருத்துவ மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வரும் வருடம் முதல் மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த பாடங்களின் படிப்புகள் இந்தியிலும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் இது பற்றி இன்று உத்தரபிரதேச துணை முதல் மந்திரி பிரஜேஷ் பதக் கூறியிருப்பதாவது மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்க உத்திரபிரதேச அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. மேலும் இது தொடர்பாக சில மருத்துவ புத்தகங்களும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கிறது இதற்காக அமைக்கப்பட்ட குழு மூலம் மேலும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |