Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே கோயில் திட்டமா”….?? பாஜக சொல்லவருவது என்ன….? சர்ச்சையை கிளப்பிய யோகி ஆதித்யநாத்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில் அவர் பேசியது பின்வருமாறு, அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோயில் வரும் 2023 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும். அவ்வாறு முடிக்கப்பட்ட பின்னர் அதுவே இந்தியாவின் தேசிய கோயிலாக அறிவிக்கப்படும் என அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவுக்கு தேசியக்கொடி, தேசிய விலங்கு, தேசியப் பறவை என பலவும் உள்ளன. இந்த வரிசையில் தேசிய கோயில் என்ற ஒன்றை ஏற்பாடு செய்ய அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பாஜகவினர் இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என கூறிக்கொண்டு வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவிற்கு தேசிய மொழி என்றெல்லாம் எதுவும் கிடையாது மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு பிராந்திய மொழி தான்.ராமர் கோயில் விவகாரம் தான் இந்தியாவில் பாஜகவை பற்றி பேச வைத்த ஒரு விவகாரம் ஆகும். அத்வானி நடத்திய ரத யாத்திரையும் பாபர் மசூதி இடிப்பும் பாஜகவின் நிலை பற்றி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேச வைத்தது. எப்படியோ பல முயற்சிகளுக்குப் பின்னர் பாஜக இப்போது தான் நினைத்தபடி கோவில் கட்டி வருகிறது. ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும் அந்த கோவில் பாஜகவினரின் புனித தலமாக மாறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால் அந்த கோயிலை நாட்டிற்கே தேசிய கோயிலாக அறிவித்து விடுவோமோ என்பதுதான் மக்களின் தற்போதைய கேள்வி.

Categories

Tech |