உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பிரதமர் மோடி தொகுதி அமைந்திருக்கும் வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. வாரணாசியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 15 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அயோத்தியில் 24 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்ற, ஆளும் கட்சியான பாஜக 6 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதைதொடர்ந்து பிஎஸ்பி 5 இடங்கள், எஞ்சிய இடங்களில் சுயேச்சைகள் வென்றுள்ளன.