Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் பகுதியில்…. “5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதனின் தடயங்கள்”…. கண்டுபிடித்த வரலாற்று ஆய்வாளர்கள்…!!!!

5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டிய வழவழப்பான கற்குழிகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் சாலவாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம காடுகளுக்கு அருகில் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்களின் ஆயுதங்களை தீட்டுவதற்கு பயன்படுத்தி இடங்களை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன், குழுவினர் கண்டுபிடித்துள்ளார்கள். இதுகுறித்து கொற்றவை ஆதன் கூறியதாவது, அன்பில் பிரியன் கொடுத்த தகவலின் அடிப்படையில் விஜயகுமார் தாஜூதீன் அகமது ஆகியோருடன் சேர்ந்து காட்டுப் பகுதிக்கு அருகே உள்ள அமரக்கல்குன்று மற்றும் இரண்டு பாறைகளை கள ஆய்வு செய்தோம்.

அதில் புதிய கற்கால மனிதர்கள் தங்களின் ஆயுதங்களை தீட்டுவதற்கு பயன்படுத்திய வழவழப்பான கற்குழிகள் இருப்பதை கண்டுபிடித்தோம். புதிய கற்காலம் என்பது வேட்டை சமூகமாக இருந்த ஆதிமனிதர்கள் உணவை தேடி நாடோடிகளாக ஓடி திரிவது முடிந்து ஒரு இனக்குழுவாக ஒரு இடத்தில் தங்கி வாழத் தொடங்கிய காலம் என்று கருதலாம். 3000 வருடங்களுக்கு முன் முந்தைய காலமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து இருக்கிறது. அந்தப் பட்டையை தீட்டவும் கூர் செய்வதற்கும் நீர் தேவைப்பட்டதால் நீர் தேங்கும் மலைப்பகுதிகளையும்,பாறைகளையும் தேர்வு செய்த போது நீர்த் தேங்கும் சுனைகளை கொண்ட இந்த அமரக்கல்குன்று நீர்தேங்கும் வசதிகள் உள்ள இந்த பாறைகளை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

அவ்வாறு பட்டை தீட்டிய இடங்கள்தான் நாங்கள் கண்டுபிடித்தோம். இந்த அமரக்கல்குன்று மிகப் பெரிய பாறைகளை கொண்டதாக இருக்கிறது. அதன் நடுவில் நீர்தேங்கும் பெரிய சுனை ஒன்று அமைந்துள்ளது. அதன் அருகே நான்கு இடங்களில் வெவ்வேறு அளவுடைய வழவழப்பான குழிகள் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அதில் ஒரு குழி 21 சென்டிமீட்டர் நீளமும், 10 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது.மேலும் வெவ்வேறு அளவுடைய 2 குழிகள் காணப்படுகிறது. அதை ஆய்வு செய்து பார்த்தபோது அது கற்கால மனிதர்கள் கல் ஆயுதங்களை கூர்மை செய்வதற்கும் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதே போன்று இந்த இடத்திற்கு அருகே இரண்டு பெரிய பாறைகளிலும், நீர் தேங்கும் சுனைகளும் அதன் அருகில் பல்வேறு அளவுகளில் 9 இடங்களில் வழவழப்பான பல்வேறு குழிகள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். இந்தப் பாறை மற்றும் குன்றுகளில் நீர் தேங்கும் சுனைகளை சுற்றி பல இடங்களில் பல வழிகளில் கற்கால மனிதர்கள் தங்களின் ஆயுதங்களை பட்டை தீட்டி கூர்மைப்படுத்தி அவற்றைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடவும் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை உணவிற்காக பல துண்டுகளாக பயன்படுத்த இந்த கருவிகளை பயன்படுத்தி கொண்டார்கள்.

இதைத்தொடர்ந்து 5 ஆயிரம் வருடங்களாக இந்த ஊரில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பது இந்த ஊரின் சிறப்பு. இதைப்போன்று பழங்கால வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது நமது கடமை. எனவே தமிழகத் தொல்லியல் துறை இந்த இடங்களை உடனே ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.

Categories

Tech |