Categories
தேசிய செய்திகள்

உத்திர பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்…!!!

உத்திரபிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் பதேன்வா கிராமத்தில் முன்னு லால் என்பவர் வசித்து வருகிறார். அவர் மனைவி மவுசம் தேவி கர்ப்பமாக இருந்த நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஆம்புலன்ஸிற்கு அழைப்பு தெரிவிப்பதற்கு முன்னரே அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் இருக்கின்ற ரியூசா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த நான்கு குழந்தைகளும் குறைவான எடையைக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நான்கு குழந்தைகளுக்கு தந்தையான மகிழ்ச்சியில் இருந்த முன்னு லால், ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் கிடைக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |