நடிகை மௌனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சீரியல்கள் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டதால் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இவர் சமீபத்தில் சூரஜ் நம்பியர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை மௌனி ராய் தனது நெருங்கிய தோழி ரூபாலியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தன்னுடைய நெருங்கிய தோழிக்கு மிகவும் உருகி உருகி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதாவது 50-வது மாடியில் இருந்து குதிக்க சொன்னால் கூட உனக்காக நான் குதித்து விடுவேன். உன்னை 2 மாதங்களுக்கு பார்க்க கூடாது என நினைக்கிறேன். ஆனால் ஒரு மணி நேரம் கூட உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. நீங்கள் எப்போதும் என்னுடையவராக என்னுடன் இருக்கவேண்டும். என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரூப்ஸி. நாம் அனைத்து பண்டிகைகளிலும் ஒன்றாக இருந்து கொண்டாட வேண்டும். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் உன்னை நான் முட்டாள் தனமாக நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.