இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்று டி 20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 162 ரன்கள் அடித்த நிலையில் இந்தியா இரண்டாவதாக களமிறங்கியது. ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 40 (19), இஷான் கிஷன் 35 (42) சிறப்பான துவக்கம் தந்ததுள்ள நிலையில், வழக்கம்போல மிடில் வரிசை திணறியது. கோலி 17 (13), ரிஷப் பந்த் 8 (8) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல், அணிக்கு நெருக்கடியை உருவாக்கினர் .
இருப்பினும், நல்வாய்ப்பாக சூர்யகுமார் யாதவ் 34 (18), வெங்கடேஷ் ஐயர் 24 (13) இவர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுகொடுத்தனர். மேலும் போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா போட்டியை முன்பே முடித்திருக்க வேண்டும் என மிடில் வரிசை மீது அதிருப்தியை வெளிக்காட்டினார். மேலும் பேசிய அவர் டி20 உலக கோப்பைக்கு மிடில் வரிசையில் பந்துவீச கூடியவர்தான் அணிக்கு தேவை எனவும் நிர்வாகம் கூறியதால் தான் ஷ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டார்.
இதன் காரணமாக உலக கோப்பை அணியில் சூரியகுமார் யாதவிற்க்கு பதிலாக ஷ்ரேயஸ் இருப்பார் என்பது நிரூபணமாகிவிட்டது. மிடில் வரிசையில் பந்து வீசி வரும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி வருவதால் ஹார்த்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் நிச்சயம் பந்துவீசி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில் இவருக்கும் டி 20 உலகக்கோப்பையில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என யூகிக்கப்படுகிறது.
மேலும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடவில்லை அதனால் உடனே அணியில் இருந்து நீக்குவதாக ரோகித்சர்மா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அனைத்து வீரர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடைசி டி20 போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரிஷப் பந்த் உள்ளார் என தெரிவித்துள்ளனர்.