Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனக்கு ஜாதகப்படி நேரம் சரியில்லை” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி காந்திநகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த பாலாஜி தொழில் தொடங்குவதற்காக ராஜேஸ்வரியிடம் 3 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு உனக்கு ஜாதகப்படி நேரம் சரி இல்லை எனவும், 10 நாட்கள் கழித்து நகையை அடகு வைத்து பணம் தருகிறேன் எனவும் ராஜேஸ்வரி கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாலாஜி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக பாலாஜியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |