Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உனக்கு திருமணம் இப்போம் வேண்டாம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு …. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தன்ன கால்  கிராமத்தில் விவசாயியான  பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் 6  மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மணிகண்டனை  அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |