விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கனூர் காளப்பகவுண்டர் தோட்டத்து பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவீன்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு சரஸ்வதி குடிப்பழக்கம் உள்ள உனக்கு யார் பெண் தருவார்கள் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் அப்பகுதியில் இருக்கும் ஆற்று பாலத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நவீன்குமாரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.