சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கண்ணதாசன் தெருவில் 12 வயது சிறுவன் மசூதியில் தொழுகை நடத்தி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது யார் என்று தெரியாத ஒரு நபர் சிறுவனை தாக்கியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் தினமும் அரபி வகுப்பிற்கு செல்வது வழக்கம். அரபி வகுப்பிற்கு சென்று படிப்பை முடித்துவிட்டு தொழுதுவிட்டு இரவு 8 மணி அளவில் தனி அவர் சைக்கிளில் வந்துள்ளார். தினமும் அவர் அந்த சாலை வழியாகத்தான் திரும்புவார் என்று கூறப்படுகின்றது. அந்த சாலையில் பெரும்பாலும் ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்.
சம்பவ தினத்தன்று அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் சிறுவனின் சைக்கிளை மறித்து சிறுவனின் சைக்கிள் அருகே வந்து அவரை நகர விடாமல் எங்கே செல்கிறாய் என்று கேட்டுள்ளார். அந்த சிறுவனிடம் சண்டைக்கு செல்வது போல் அதட்டி பேசியுள்ளார். சிறுவன் எதுவும் செய்யாத போது அந்த நபர் சண்டைக்கு சென்றுள்ளார். சிறுவன் முறைத்து பார்க்க ஏய் உனக்கு குல்லா ஒரு கேடா என்று கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்து அந்த சிறுவன் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றார். பின்னர் பெற்றோரிடம் சென்று கூற அவர்கள் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை செய்து அந்த மத வெறியனை கைது செய்துள்ளனர் .