இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த அந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென விஜயா தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் மகேஸ்வரனின் குடும்பத்தினர் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயாவின் தாயார் நீ உனது கணவர் வீட்டிற்கு தானே செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை கேட்டதும் விஜயா தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.