Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உனது மகளை அடக்கி வைக்க மாட்டியா….??? சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள முல்லைவாடி ரங்கன் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அருணா(14) என்ற மகள் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி அப்பகுதியில் இருக்கும் மரத்தில் கயிற்றால் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்யா என்பவர் உனது மகளை அடக்கி வைக்க மாட்டாயா என கூறி கீதாவிடம் தகராறு செய்துள்ளார்.

மேலும் அடுப்பு ஊதும் குழலால் சிறுமியின் தலையில் ஓங்கி அடித்ததால் சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சத்யாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சத்யாவுக்கு 1000 ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |