Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“உன்னிடம் இருக்கும் பணத்தை கொடு” வாலிபருக்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் நகரில் அபுபக்கர்சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தங்கையின் திருமணத்திற்கு நகை வாங்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அபுபக்கர்சித்திக்கை தொடர்பு கொண்டு பேசிய மதுரை மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னிடம் 200 கிராம் தங்க கட்டிகள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அபுபக்கர்சித்திக் 10 லட்ச ரூபாய் பணத்துடன் பொய்மான்கரடு  பகுதிக்கு சக்திவேலை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சக்திவேலின் வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து காரில் வந்த 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து  தாங்கள் அதிகாரிகள் என கூறி 10 லட்ச ரூபாய் பணத்தையும் பறித்து கொண்டு  அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அபுபக்கர்சித்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  சக்திவேலுடன்  சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |