சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஆபத்தாரனபுரம் அம்பேத்கர் நகரில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமாருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமிக்கும் ஜவுளி கடையில் வேலை பார்க்கும் பொழுது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் தனியாக இருந்த சிறுமியிடம் நவீன்குமார் ஆசை வார்த்தைகள் பேசி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
பின்பு அந்த சிறுமியை நவீன்குமார் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் நவீன்குமார் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அந்த சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் நவீன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.