Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வெங்கங்குடி கிராமத்தில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார்.இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுகுமார் பொன்மலை பகுதியில் வசிக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பிறகு சுகுமார் அந்த பெண்ணிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 1 பவுன் தங்க மோதிரத்தை வாங்கியுள்ளார்.

ஆனால் சுகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து அந்த பெண் கேட்ட போது சுகுமார் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் புவனேஸ்வரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |