Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உன்னை கல்யாணம் பண்ண முடியாது” கர்ப்பிணியின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் முகநூல் மூலமாக தனக்கு அறிமுகமான மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து மணிகண்டனிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார்.

அப்போது மணிகண்டன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |