Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உன்னை கொன்னுடுவேன்…. பெண்ணை மிரட்டியவரை தூக்கிய போலீஸ்…. மற்றொருவருக்கு வலை..!!

நெல்லை  அருகே  பெண்   ஒருவருக்கு கொலைமிரட்டல்  விடுத்த  நிலையில், ஒருவரை   கைது  செய்துள்ள  காவல்துறையினர்  மற்றொருவரை  தேடி   வருகின்றனர். 

நெல்லை   மாவட்டத்தில்   உள்ள அத்திமேடு   இந்திரா காலனி   பகுதியில்  சங்கரம்மாள் (வயது 47)   என்பவர்  வசித்து  வருகிறார்.   இவருக்கும்  அதே  ஊரில்   உள்ள  முப்புடாதி அம்மன் கோவில் தெருவில்  வசித்து   வரும் சுப்புகுட்டி  என்பவரின்  மகன் குமார் (50)   என்பவருக்கும் இடையே  ஏற்கனவே  முன்விரோதம்  இருந்துள்ளது.

இந்த  நிலையில்   குமார்  மற்றும்  அவரது   உறவினரான திருவேங்கடநாதபுரத்தில்  வசித்து  வரும்   கண்ணன் என்பவரின்    மகன் விஜி (25)   ஆகிய  இருவரும்  சேர்ந்து சங்கரம்மாளை அவதூறாக பேசியதாகவும்,  அதன்  பின்பு  கொலை  செய்வதாக  மிரட்டல்  விடுத்துள்ளனர். இது குறித்து  சங்கரம்மாள்   சுத்தமல்லி காவல்துறையினிடம்  கொடுத்த   புகாரின்  பேரில்  காவல்துறையினர்   வழக்குப்பதிந்து குமார்  என்பவரை  கைது செய்தனர்.  இதில் கொலை மிரட்டல் விடுத்த  இன்னொரு நபரான  விஜி  என்பவரை  தேடி வருகின்றனர்.

Categories

Tech |