தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலணியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான திருமால் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் குமார் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திருமால் அரிவாளுடன் சென்று உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
மேலும் சமாதானப்படுத்த முயன்ற மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் முனிராஜ் ஆகியோரிடமும் திருமால் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.