Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உன்னை நம்பித்தானே வந்தேன்!.. கூகுள் மேப்பால் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

கிருஷ்ணகிரியில் சென்ற சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்துவரும் மழையால் நகரே வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. இதற்கிடையில் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு இடங்களில் தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், விளை நிலங்களில் ஆகியவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளது. ஓசூர் அருகில் பேகேப்பள்ளி பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் 5 அடிக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பெங்களூரு சர்ஜாபுராவை சேர்ந்த ராகேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன் தினம் நள்ளிரவில் ஓசூர் வந்தார். இதையடுத்து அவர்கள் ஊருக்கு செல்ல கூகுள்மேப் போட்டு கொண்டு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கூகுள் மேப் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலத்துக்கு மேல் வழிகாண்பித்து அழைத்து சென்றுள்ளது. அதை பின்பற்றி காரை ஓட்டிச் சென்ற அவர்கள் தரைப்பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிதவித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் ராகேஷ் அவசர போலீஸ் உதவியை நாடினார். அதன்பின் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் வாயிலாக காரிலிருந்த 4 பேரையும் பாதுகாப்பாக மீட்டு மேலே கொண்டுவந்தனர். அதனை தொடர்ந்து காரை பொக்லைன் எந்திரம் வாயிலாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |