தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ. இவர் தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குண்டாக இருந்த அவர் கடந்த ஆண்டு ஒல்லியான தோற்றத்திற்கு மாறினார். அவர் உடல் எடையை குறைத்ததை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். அவர் புதுவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து தனது ட்விட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மார்டன் உடை ஒன்றை அணிந்து அவர் போட்டோ வெளியிட்டார்.
அதைப் பார்த்த ரேகா என்பவர், அழகாக தான் இருக்கிறீர்கள், ஆனால் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தோல் திருத்தங்களை செய்ய வேண்டும்? உங்களுடைய நல்ல தோற்றத்துடனே நீங்கள் வயதாகலாம் என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த குஷ்பு, நீங்கதான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்?மத்தவங்களை துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுன்னு தெரியல. உன்னை நினைச்சா அவமானமா இருக்கு என தரமான பதிலடி கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.