பேருந்தில் முக கவசம் அணியாமல் பயணித்த பெண் சக ஆண் பயணி மீது எச்சில் துப்பியதால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார்
கனடாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணொருவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இந்நிலையில் உடன் பயணித்த பயணி ஒருவர் அருவருப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனைக் கேட்ட அந்தப் பெண் அவரது முகத்தில் துப்பி விட்டு நகர்ந்து செல்கிறார். இதனால் கோபம் கொண்ட அந்த நபர் எழுந்து சென்று அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்கிறார். இறுதியில் அந்த பெண்ணை பேருந்தில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளி வெளியானதில் பேருந்திலிருந்து கீழே விழுந்த பெண்ணுக்கு உதவுவதற்கு ஆன் ஒருவர் செல்வதை பார்க்க முடிகின்றது. காணொளி வெளியானதால் அதில் சம்பந்தப்பட்ட இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். முக கவசம் அணியாமல் தொற்று பரவும் காலத்தில் மற்றவர் மீது எச்சில் துப்பிய பெண் கைது செய்யப்படுவாரா? அல்லது பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக ஆண் கைது செய்யப்படுவாரா? என்பது கேள்வியாக உள்ளது.