Categories
உலக செய்திகள்

உன்னை புதைச்சுடுவேன்… குழந்தையை கொன்னுடுவேன்… மிரட்டிய பெண்ணை எச்சரித்த நீதிபதி ..!!

தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிய ஆஸ்திரேலிய பெண்ணை நீதிபதிகள் எச்சரித்து அனுப்பினர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா ஜேன்(22) என்ற பெண் ஆடம்பர ஆடையகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று அவர் வேலை பறி போக, அதற்கு காரணம் தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரான பெண் ஒருவர் தான் என நம்பி கோபத்தில் அந்த பெண்ணுக்கு ஒரு குறும் செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த செய்தியில் “ஒழுங்காக இரு உன்னை மண்ணுக்குள் போட்டு புதைத்துவிட்டு உன் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிடுவேன்” என்று எழுதியிருந்தது.

இது குறித்து காவல்துறையிடம் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெசிக்காவை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தினர். அங்கு ஜெசிக்கா, தன்னுடைய வேலை போனதால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் ஜெசிக்காவின் வக்கீல் அது வெறும் ஒரு மிரட்டல் மட்டும் தான் அவர் வேலை போன கோபத்தில் அப்படி செய்து விட்டார்.

அவர் குறுஞ்செய்தியில் சொன்னதுபோல் செய்யும் நோக்கம் எல்லாம் கிடையாது ஜெசிக்காவுக்கு என்று வாதாடினார். விசாரணைக்குப் பின் இன்னொரு முறை இப்படி ஏதாவது நடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் 12 மாதங்களுக்கு அவர் ஒழுங்காக நடந்து கொள்கிறாரா? என கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் சிறை செல்லும் சூழலிலிருந்து ஜெசிக்கா தப்பியுள்ளார்.

Categories

Tech |