இசைக்கு எல்லை இல்லை என்று கூறுவதுண்டு அது உண்மை என்பது போல நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் ரசிகர்களின் பேராதரவுடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இவர் ஏறத்தாழ 1400 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்ததோடும் இசை கச்சேரிகளை பலநாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் “ராக் கெட் ராஜா” என்னும் இசைக் கச்சேரியில் இளையராஜாவும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்கள் பாட இருக்கின்றனர். இந்த தருணத்தை வெளிப்படுத்தும் வகையில் தேவிஸ்ரீ பிரசாத் எனது “கனவு நனவாகப் போகிறது” என்ற குறிப்பை பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா “உன்னை மேடையில் சந்திக்கிறேன்” எனவும் பதிவிட்டது சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.