பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் மருமகள் டயானா இருவரும் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக பல கடிதங்கள் எழுதியது தெரியவந்துள்ளது.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கடந்த 1981-ம் வருடம் இளவரசி டயானாவை திருமணம் செய்யும் சமயத்தில் இளவரசர் பிலிப் டயானாவை வரவேற்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதை அறிந்தவுடன் தன் மருமகளுக்கு இளவரசர் பிலிப், பல கடிதங்களை எழுதி ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
இதனை அரண்மனையின் சமையல்காரராக இருக்கும் பால் பரல் என்பவர் கூறியுள்ளார். அதாவது இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவிற்கு இடையில் திருமண பந்தம் முடிந்து விடக்கூடாது என சார்லஸை விட அதிகம் எண்ணியவர் இளவரசர் பிலிப். இதனால் இவர் டயானாவிற்கு பல கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ஒன்றில், தன் மகனிற்கும் கமீலா என்ற பெண்ணிற்கும் இடையே தவறான உறவு இருப்பது அறிந்த உடன் தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். அதே சமயத்தில் டயானாவும் வேறு ஒரு நபருடன் பழகுவதை தெரிந்துகொண்ட பிலிப் நீங்கள் இருவரும் வெவ்வேறு காதலர்களை வைத்திருப்பது ஏற்க முடியாதது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும் உயர் தரத்தில் உள்ள சார்லஸ் கமிலாவிற்காக இப்படி நடந்துகொள்வது கேவலமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கமிலாவிற்காக உன்னை பிரிவதற்கு சார்லஸ் முடிவு எடுப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு நபரால் உன்னை போன்ற பெண்ணை பிரிந்து கமிலா போன்ற பெண்ணிடம் செல்ல முடியும் என்பதை நினைக்ககூட முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது இளவரசர் பிலிப் தன் மருமகளான டயானாவிற்கு கடந்த 1992-ம் வருடம் ஜூன் மாதத்திலிருந்து டயானா மற்றும் சார்லஸ் பிரிந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் வரை கடிதங்கள் அனுப்பிவந்துள்ளார். அதாவது இளவரசர் பிலிப், தன் மகன் மற்றும் மருமகள் இருவரும் பிரிந்து விடக்கூடாது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அவை அனைத்தும் தோல்வியடைந்த பிறகு அவர் டயானாவிற்கு எந்த கடிதமும் எழுதவில்லை.