Categories
தேசிய செய்திகள்

உன்ன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது… கருவ கலைச்சுடு… கான்ஸ்டபிளால் மைனர் பெண்ணிற்கு நடந்த கொடுமை….!!!

மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கி கருவை கலைத்த போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு தட்சிண கன்னடா மாவட்டம் கடபா பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த மைனர் பெண் மற்றும் பெற்றோர்கள் கடப்பா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கடபா நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் தேவராஜ் என்பவர் வழக்கு முடிந்த பிறகும் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இதனால் போலீஸ்காரர் தேவராஜ்க்கும், பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விசாரணை என்ற பெயரில் தேவராஜ் வீட்டிற்கு வந்து வீட்டில் பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் அவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார். இதனால் அந்த பெண் 5 மாதம் கர்ப்பமாக ஆனார். பெண்ணின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தேவராஜை செல்போனில் அழைத்த அப்பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி உள்ளார்கள். ஆனால் உங்களது மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், கர்ப்பத்தை கலைத்து விடும்படி கூறியுள்ளார். அதற்கான பணத்தை அனுப்புகிறேன் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து சிவராஜ் கருவை கலைப்பதற்கு 35 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.

அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மைனர் பெண்ணும் அவரது தாயாரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கருவை கலைப்பதற்கு சென்றுள்ளனர். நீண்ட நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் அப்பெண்ணின் தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் அந்தப் பெண் மற்றும் தாயை மீட்டனர். பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த போலீஸ்காரர் தேவராஜை கைதுசெய்தனர்.

Categories

Tech |