நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள தனிமனித இடைவெளி கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அடுத்தவரின் பக்கத்தில் செல்லும் பொழுது அவருக்கும் நோய்த்தொற்று ஏற்படும். எனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு வீட்டிலோ அல்லது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இருக்கையில் தெலங்கானா மாநிலம் நெமிலி குட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், அவரின் மாமியாருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் சமூக இடைவெளியை கடைபிடித்து தள்ளி இருந்துள்ளார். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த மாமியார் திட்டமிட்டு தன்னுடைய மருமகள் மீது இருந்த வன்மத்தின் காரணமாக, தனது மருமகளை பரிவுடன் கட்டி பிடிப்பது போன்று வேண்டுமென்றே கட்டிப்பிடித்து கொரோனாவையே பரப்பியுள்ளார். அதிகாரிகள் விசாரணையில் இது குறித்து தெரியவந்துள்ளது.