நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையின் காரணமாக கடந்த நாற்பது நாட்களுக்கு பிறகு மீண்டும் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். அப்போது மது கடைக்கு வந்த நபர் ஒருவர் பைகளை எடுத்துக்கொண்டு பாதுபாட்டிலகை அள்ளிச்சென்றார். பின்னர் அவர் அந்த மதுபான பாட்டிலை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.