தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தனது 19 வயது பேத்தியை மிரட்டி அப்பெண்ணின் 70 வயது தாத்தாவை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த முதியவர், பேத்தியிடம் வேறு ஒருவருடன் தவறாக நடந்து கொண்டதாக பொய்பழி சுமத்தி தனது பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று சில வருடங்களாகவே மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து மிரட்டியதோடு மட்டுமில்லாமல் பாலியல் வன்கொடுமையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அந்த முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.