செல்லும் பாதையில்.. !! வாழ்வில் எச்சூழலுக்கும் அஞ்சாதே…! தயக்கமும், குழப்பமும் இருக்கும் வரை எந்த மாற்றமும் உன்னில் ஏற்படாது:
மனம்விட்டு வேதனை விளக்கு உனக்கான பாதை தென்படும் ! நீ நிற்பது பயிற்சித்தளம்! கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால். ..பின்பு எல்லாமே இங்கு பாடம் தான்! நீ எத்தனை வருடங்கள் வாழ்ந்தாய் என்பதை வயதைக் கொண்டு கணக்கிடாதே! நீ வாழ்ந்ததை கொண்டு கணக்கிட்டுப்பார், நீ இன்னும் வாழவில்லை என்பது புரியும். பகையெனில் நீ பகை கொள்! நட்பெனில் நீ நட்பு கொள்! எல்லோரையும் நம்புவது உன்னை முட்டாளாக்கும்! உன்னை நம்பாமல் இருப்பது உன்னை கோழையாக்கும்! அடுத்தவன் சொல்படி வாழ்வதை விட… அடுத்தவர்கள் சொல்லும் படி வாழ்! உனக்கும் உன் வாழ்விற்குமான அர்த்தங்களை தேடு.
பிடிக்காததை செய்து நல்லவன் என்று பெயர் எடுப்பதை விட…மனம் பிடித்த நல்லதை செய்து கெட்டவன் என்று பெயர் எடு! உருண்டோடும் வருடங்கள் உன்னை வளர்காது… காயங்களும், வலிகளுமே உன்னை வளர்க்கும்! உடற்பயிற்ச்சிகூடம் உன் உடலை வளர்க்கும், ஆனால் தைரியத்தை வளர்க்காது! சூழலை சந்தித்தாலே அது சாத்தியம்! உன் வாழ்வை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா! யாரையும் பகைக்காதே! பழிக்காதே! நல்லவர்கள் சாபம் விட்டால் அது பலிக்கும்… ஆனால், சாபம் விடுகின்றவர்கள் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள். நகர்வது வாழும், நிற்பது விழும் என்பதே பிரபஞ்ச விதி, என்ன ஆயினும் நகர்ந்து செல்…உன்னை தாக்க நினைப்பதை, தூக்கி எறிந்து செல்! என்னிலையிலும் வாழ்க்கை அழகானதே… வாழ்க்கை வாழ்வதற்கே..