Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உன் வயசு என்ன… அவங்க வயசு என்ன….? “பெற்றோர் கண்டிப்பு” திருமணம் நிச்சயமான பெண் தூக்கிட்டு தற்கொலை…..!!

மயிலாடுதுறை அருகே பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள மொழையூர் மேலவெளி என்ற தெருவில் முத்துக்குமார் என்பவர் தனது 24 வயதுடைய சண்முகப்பிரியா என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார். எம்பிஏ பட்டதாரியான சண்முகப்பிரியா தான் ஒரு பட்டதாரி பெண் என்பதை மறந்து தினமும் அந்த தெருவில் இருக்கின்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் விளையாடி தனது பொழுதை போக்கி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்வதற்கு அவரின் பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர்.

திருமணம் நிச்சயக்கப்பட்ட பின்னரும் சண்முகப்பிரியா குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பெற்றோர் சண்முக பிரியாவை கண்டித்துள்ளனர். அதனால் மனமுடைந்த சண்முகப்பிரியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை அறிந்த அவரின் பெற்றோர் சண்முக பிரியாவை மீட்டு உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சிறுவர்களுடன் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |