திருவனந்தபுரம் அருகே வாலிபர் ஒருவர் மது வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்து ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த 19 கார்களை சேதப்படுத்திய உள்ளார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள தாம்பனூர் ரயில் நிலையத்தில் பயணிகள் சிலர் காரில் வரும் பட்சத்தில் கார்களை பார்க் செய்துவிட்டு பின்னர் ரயிலில் சென்றுவிட்டு மாலை திரும்பும்போது அந்த கார்களை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த கார்களை உரிமையாளர்கள் எடுக்க சென்றபோது அவர்கள் கண்ட சம்பவம் அதிர்ச்சி அடைய செய்தது. அங்கு நிறுத்தியிருந்த சுமார் 19 க்கும் மேற்பட்ட கார்கள் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு சேதமடைந்து காணப்பட்டன. இதுகுறித்து திருவனந்தபுரம் ரயில்வே போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் ஆவேசமாக கார்களை சேதப்படுத்துவது பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரை தேடி பிடித்து கைது செய்த போலீசார் தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. ஆனால் மது வாங்குவதற்கு குடும்பத்தினர் பணம் தராததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தாம்பனூர் ரயில் நிலையம் சென்று அங்கு பார்க் செய்யப்பட்டிருந்த குடும்பத்தினர் மற்றும் பிறரின் கார்களையும் அடித்து நொறுக்கி உள்ளார். மேலும் இதில் சேதமடைந்த காரில் இருந்த சில பொருட்களும் காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.