Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் வீட்டுக்கு போ…! 10லட்சம் வாங்கிட்டு வா…! சாதி பெயரை சொல்லி அவமானம்… காதல் மனைவிக்கு நேர்ந்த துயரம் ..!!

சென்னையில் தன் மனைவியை சாதி பெயர் கூறி வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் பாலமுருகன் என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் ஆனந்தராஜ் (30) மற்றும் பாக்கியலட்சுமி (29). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி கர்ப்பமானதால் ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவீட்டாரும் அவர்களை சமாதானம் செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு ஆனந்தராஜ், தொழில் நடத்தப் போவதாகக் கூறி பத்து லட்சம் ரூபாய் உன் தந்தையிடம் வாங்கி வருமாறு பாக்கியலட்சுமியை கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பொருளாதார நெருக்கடியில் இருந்த பாக்யலட்சுமியின் குடும்பத்தினர், பணம் தற்போது இல்லை சிறிது நாட்கள் கழித்து தருவதாக ஆனந்தராஜ்ஜிடம் கூறியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், பாக்கியலட்சுமியை அவரின் சாதி பெயரை கூறி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். மேலும் ஆனந்தராஜ் அவரின் குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டு பாக்கியலட்சுமியை வரதட்சனை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பாக்கியலட்சுமி கடந்த ஆண்டு அக்டோபரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் அவரின் பெற்றோர் மீது புகார் தெரிவித்துள்ளார். இதன்படி காவல்துறையினர் ஆனந்தராஜை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |