மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று அரக்கோணத்தில் இருந்து டி45 அரசு பேருந்து சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். அப்போது படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி ஓட்டுனரும், கண்டக்டரும் மாணவர்களை கீழே இறங்குமாறு கூறினர்.
அதற்கு உன் வேலை என்னவோ அதை மட்டும் பார் என மாணவர்கள் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் ஆபத்தை உணராமல், அறிவுரை கூறினாலும் கண்டுகொள்ளாமல் சாகசம் செய்வதாக பயணிகள் கூறியுள்ளனர். எனவே அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.