உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உத்திரப்பிரதேச மாநில காவல்துறையினர் மேற்கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும்,அனைத்து மக்களின் நலனை கருதியும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை விரைவில் அமல்படுத்த வேண்டுமென கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த மனுவை வழக்கறிஞர் ஜெயசுகின் தாக்கல் செய்துள்ளார்.