Categories
சினிமா தமிழ் சினிமா

உபேந்திரா, சுதீப் நடிப்பில் கப்ஜா…. 7 மொழிகளில் ரிலீஸ்…. சுதந்திர வீரரின் மகன் மாஃபியா கும்பலிடம் இருந்து தப்பித்தாரா…..?

கன்னட திரையுலகில் நட்சத்திர நடிகர்களாக வளம் வருபவர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் இருவரும் இணைந்து ‘கப்ஜா’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா.என ஏழு மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில்  நடிகை ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சண்டைக் காட்சிகளை ரவிவர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் என 4 சண்டை பயிற்சி இயக்குனர்கள் இயக்குகிறார்கள். கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஆர்.சந்துரு இயக்கத்தில் படம் தயாராக இருக்கிறது. இதைப்பற்றி இயக்குனர் கூறியது, 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்க முடியாத காரணங்களால் மாபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு நடந்தது என்ன? என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் ‘கப்ஜா’ திரைப்படம் என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |