தூத்துக்குடியில் உப்பளம் தொழில், மீன்பிடித்தொழில் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கிறது. குஜராத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி உப்பு உற்பத்தியில் இருக்கிறது. இங்கு நாவை சுண்டி இழுக்கும் மக்ரூன் பிரபலம். மிகப்பெரிய துறைமுகங்களில் தூத்துக்குடி வஉசி துறைமுகமும் ஒன்று. விமானம், கப்பல், பேருந்து, ரயில் ஆகிய 4 வழித்தடங்கள் இருக்கின்றன. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கீதா ஜீவன் இருக்கிறார். இங்கு உப்பள தொழிலானது மழைக்காலங்களில் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகள் அதிகம் இல்லாததால் தொழிற்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது வரை சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் வாகனத்தை சரிவர இயக்க முடியாமல் விபத்து ஏற்படுவதாக இதற்கு தீர்வாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் சரியான வடிகால் இல்லாத நிலையில் இருப்பதாகவும் இதனை சரிசெய்ய முறையாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி விவிடி சிக்கனல் சாலை நான்கு வழி சாலையாக அமைக்க வேண்டும் என்றும், இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் இந்த திட்டத்தை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.