Categories
அரசியல் மாநில செய்திகள்

உப்பிக்களின் உள்ளடி வேலை…! திமுகவோடு தொடர்பு…. அமைச்சருடன் பேச்சு… அதிர்ச்சியில் முக.ஸ்டாலின் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு எல்லா கட்சியிலிருந்தும் ஓட்டு விழும். அதையெல்லாம் நான் சொல்ல முடியாது. எல்லா சமூகத்திலிருந்தும் எனக்கு ஓட்டு விழும். எல்லா சமுதாய பெருமக்களும் எனக்கு வேலை செய்வார்கள். நான் வேட்பாளர் என்றதுமே நிறையா நண்பர்கள் உடனே வந்துட்டாங்க. இவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் எனக்கு தான் வேலை செய்வார்கள். நாங்கள் பகிரங்கமாக வந்து விடுவோம் என்கிறார்கள்.

பகிரங்கமாக வந்து வேலை செய்கிறோம் என்று சொல்கிறார்கள். இவர் வி.எஸ் ராஜா நகர்மன்ற உறுப்பினர், மதிமுகவின் நகரச் செயலாளர். 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர். இங்கு இருக்கக்கூடிய மக்கள் அத்தனை பேரும் அரசியல் அனுபவம் உள்ளவர்கள். ராஜபாளையம் நகரத்தில் மக்கள் பணியாற்றுபவர்கள் தான் இன்றைக்கு என் கட்சியில் சேருகிறார். இன்னும் சில பேர் வெளியில் இருக்கிறார்கள். வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நான் வெற்றி பெறுவேன். சில பேர் எனக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பார்கள். சிலர் நேரடியாக உள்ளே வந்து ஆதரவு கொடுப்பார்கள். சில பேர் உள்ளே இருந்து ஆதரவு கொடுப்பார்கள். சில தொலைவில் இருந்து கொண்டு மறைமுகமாக ஆதரவு கொடுப்பாங்க. எனக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம்.

ராஜபாளையம் தொகுதியில் எனக்கு எதிரியே கிடையாது. இது அனைத்தும் என்னுடைய நண்பர்கள் வட்டாரம். திமுகவில் எனக்கு  நண்பர்கள் இருக்கிறார்கள்.திமுகவில் வேதனையில்  சில பேர் இருக்கிறார்கள் .அத்தனை பேரும் வர தயாராக இருக்கிறார்கள். அவர்களும் வந்து என் கட்சியில் சேர்ந்து விடுவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |